சிவன்காடு உருவ வழிபாட்டினை அடுத்த நிலைக்கு கொண்டு
செல்லும் முயற்சி .
இறை , இயற்கை இரண்டும் ஒன்று என உணரும் நிலை .
லிங்க உருவம் ஒரு முழுமையை உணர்த்தும்
அடையாளம் .
உருளைவடிவ மேல் பகுதி ஆணையும் , கீழ் பாகம்
பெண்ணயும் குறிக்கிறது
ஆண் , பெண் இரண்டும் சமநிலையில் கலந்த உருவம் .
நேர் , எதிர்மறை சக்திகள் இணைந்த நிலை .
முழுமை பெற்ற நிலை . முழுமையே முக்தி . முழுமையே நிறைவு
நிறைவே நித்திய இன்பம் .
லிங்க அமைப்பு முழுமை மட்டுமில்லாமல் நிறைந்த சக்தியும்
கொண்ட நிலை
உதாரணமாக ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களின் வடிவம்
உருளை உடல் அமைப்பும் , கூம்பு வடிவ தலையினையும் உடையது
மிகச்சரியாக லிங்க வடிவின் மேல் பகுதியினை குறிக்கும்
வகையில் உள்ளது
ஆக சக்தியின் முழு அமைப்பான லிங்க வடிவம் , உயிர்ப்போருளாக
இருப்பின் எத்துணை சிறப்பாக இருக்கும் .. அத்தகைய நோக்கில்
உருவானதே சிவன்காடு
செடி மற்றும் புற்களால் அமைந்த லிங்க வடிவம் நடுவிலும் , சுற்றிலும்
தலவிருட்சங்கள் சூழ அமைந்த சுகவனம் ....
நோக்கம் ;
நம் அறிவினை முடக்கும் தேவையற்ற சடங்கு , சம்பிரதாயங் -
-களில் இருந்து வெளிவரவும்
வழிபாடுகளில் சாதி சமய பேதங்களை அகற்றவும்
வழிபாட்டின் உயர் நிலையை அடையவும்
இறை ஒன்றே என உணரவும்
இயற்கையோடு இயைந்து வாழும் முறையினை அறியவும் ,
இயற்கை சீற்றங்களை குறைக்கவும், உலகம் வெப்பமயமாதலை
சிறிதளவேனும் குறைக்கவமுமான முயற்சி .
இது தனிமனித முயற்சினால் இல்லாமல் பல நல்ல உள்ளங்களின் ஆதரவினால் அமைய விழைகிறோம் ...
சிவன்காடு ( சிவாரண்யா என்கிற பெயரில் அறிவுசார் சொத்துரிமை சட்ட வழியில் )
வடிவமைப்பும் மற்றும் சிலவையும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
இடம் மற்றும் அடிப்படையான செயல்கள் முடிந்தவுடன் அனைத்து நல் உள்ளங்களின் பங்களிப்பு வேண்டி அறிவிக்கிறோம் .
இப்பொழுது உங்களின் அறிவுரைகளையும் , ஆலோசனைகளையும் விழைகிறோம்
WE REQUEST YOU ALL SEND UR VIEWS , SUGGESTIONS AND IDEAS TO THE EMAIL
sivankaadu@yahoo.in
shivaranya@ yahoo.in
தல விருட்சங்கள் ;
சிதம்பரம் - தில்லை மரம்
சிதம்பரம் திருவேட்களம் - மூங்கில்
சிவபுரி - நெல்லி
திருக்கழிப்பாலை - வில்வம்
ஆச்சாள்புரம் - மாமரம்
மகேந்திரப்பள்ளி (நாகை ) - கண்ட மரம் , தாழை
திருமுல்லைவாசல் (நாகை ) - முல்லை
அன்னப்பன்பேட்டை (நாகை ) - வில்வம்
சாயவனம் (நாகை ) - கோரை
பூம்புகார் (நாகை ) - மல்லிகை
திருவெண்காடு (நாகை ) - வடவால் , கொன்றை , வில்வம்
திருக்காட்டுப்பள்ளி ( நாகை ) - பன்னீர் மரம்
திருக்குருகாவூர் (நாகை ) - வில்வம்
சட்டைநாதர் சீர்காழி - பாரிஜாதம் , பவளமல்லி
சப்தபுரீசரர் சீர்காழி - கொன்றை
வைத்தீஸ்வரன்கோயில் - வேம்பு
குறுமாணக்குடி (நாகை ) - கொன்றை
கீழையூர் (நாகை ) - கிளுவை
திரிநின்றியூர் (நாகை ) - வில்வம்
திருப்புன்கூர் (நாகை ) - புங்கமரம்
நீடூர் (நாகை ) - மகிழம்
பொன்னூர் (நாகை ) - எலுமிச்சை
வேள்விக்குடி (நாகை ) - கல்யாணமுருங்கை
மேலதிருமணஞ்சேரி ( நாகை ) -
திருமணஞ்சேரி ( நாகை ) - கரு ஊமத்தை
கொருக்கை (நாகை ) - கடுக்காய்
தலைஞயிறு (நாகை ) - கொடிமுல்லை
திருக்குரக்கா (நாகை ) - வில்வம்
திருவாளப்புத்தூர் (நாகை ) - வாகை
இலுப்பைபட்டு (நாகை ) - இலுப்பை
ஓமாம்புலியூர் (கடலூர் ) - இலந்தை
கானட்டம்புலியூர் (கடலூர் ) - எருக்கு
திருநாரையூர் (கடலூர் ) - புன்னை
மேலக்க்கடம்பூர் (கடலூர் ) - கடம்ப மரம்
பந்தநல்லூர் (தஞ்சாவூர் ) - சரக்கொன்றை
கஞ்சனூர் (தஞ்சாவூர் ) - பலாசு
திருக்கோடிகாவல் தஞ்சாவூர் - பிரம்பு
திருமங்கலக்குடி தஞ்சாவூர் - கோங்கு, இலவு ( வெள்ளெருக்கு )
திருப்பனந்தாள் தஞ்சாவூர் - பனை
திருவாய்பாடி தஞ்சாவூர் - ஆத்தி
சேங்கனூர் தஞ்சாவூர் - ஆத்தி
திருந்துதேவன்குடி தஞ்சாவூர் - நங்கை
திருவிசநல்லூர் தஞ்சாவூர் - வில்வம்
கொட்டையூர் தஞ்சாவூர் - வில்வம்
இன்னம்பூர் தஞ்சாவூர் - செண்பகமரம்
திருப்புறம்பியம் தஞ்சாவூர் - புன்னை
திருவிஜயமங்கை தஞ்சாவூர் - மருதமரம்
திருவைகாவூர் தஞ்சாவூர் - வில்வம்
வடகுரங்காடுதுறை தஞ்சாவூர் - தென்னை
திருப்பழனம் தஞ்சாவூர் - கதலி , வில்வம்
திருவையாறு தஞ்சாவூர் -
தில்லைஸ்தானம் தஞ்சாவூர் - வில்வம்
பெரும்புலியூர் தஞ்சாவூர் - சரக்கொன்றை
திருக்கானூர் தஞ்சாவூர் - வில்வம்
திருமழபாடி அரியலூர் - பனை மரம்
கீழப்பழுவூர் அரியலூர் - ஆலமரம்
அன்பில் திருச்சி - ஆலமரம்
மாந்துறை திருச்சி - மாமரம்
திருப்பாற்றுறை திருச்சி - வில்வம்
திருவானைக்கா திருச்சி - வெண் நாவல்
திருப்பைஞ்ஞீலி திருச்சி - கல்வாழை
திருவாசி திருச்சி - வன்னி
ஈங்கோய்மலை திருச்சி - புளியமரம்
அய்யர்மலை கரூர் - வேம்பு
குளித்தலை கரூர் - கடம்பமரம்
திருப்பராய்த்துறை திருச்சி - பராய் மரம்
உய்யக்கொண்டான் மலை திருச்சி - வில்வம்
உறையூர் திருச்சி - வில்வம்
தாயுமானவர் திருச்சி - வில்வம்
திருவெறும்பூர் திருச்சி - வில்வம்
-
No comments:
Post a Comment